முதலமைச்சர்,துணை முதலமைச்சர் அவசர ஆலோசனை…!

Default Image

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
 
Image result for OPS EPS
செப்டம்பர் 26 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
இது ஒருபுறம் சென்றுகொண்டிருக்க தற்போது  முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இணைந்து  அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில், அதிமுகவில் இருந்து பிரிந்து தினகரன் அணிக்கு சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
Image result for OPS EPS
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் .இதில்  மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
உட்கட்சி விவகாரம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்