பால்கனி அரசுகள் தெளிவான முடிவெடுக்கவேண்டும் -கமல்ஹாசன்

Default Image

பால்கனி அரசுகள் தெளிவான முடிவெடுக்கவேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.ஆனால் இதன் விளைவாக நாடு முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கியது.வேலையின்றி வீட்டிலேயே அனைவரும் முடங்கி உள்ளனர்.இதற்குஇடையில்  அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜூலை 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்தது .இதற்கு முன்னரே மத்திய அரசும் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதிக்கும் எதையும் செய்ய கூடாது என்கிறார் பிரதமர்.ஆனால் மத்திய,மாநிலஅரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்கவேண்டும் பால்கனி அரசுகள் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்