ஜெ.தீபாவை உள்பட யாரையும் இணைத்துக்கொள்ள அதிமுக தயார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் அதிக குழப்பங்கள் நிலவி வருகின்றது.கட்சியில் உள்ள அனைவரும் அதிகாரப் போட்டியில் உள்ளனர்.அதேபோல் பதவிக்கும் ஆசைப்பட்டு வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பிரிந்து சென்ற பன்னீர்செல்வமும் பின்னர் பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றார்.
மேலும் சசிகலா அணியில் அவர் சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ளார் .சுதாரித்த தினகரன் மட்டும் வழக்கில் இருந்து தப்பி தற்போது ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார்.பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியையும் தொடங்கினர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சும்மா இல்லாமல் தானும் ஒரு கட்சியை ஆரம்பிப்பேன் என்று எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை ஆரம்பித்தார்.
இன்று எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொது செயலாளர் ஜெ.தீபா கருத்து ஒன்றை கூறினார். சேலத்தில் தீபா கூறுகையில்,அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் .தொண்டர்களிடம் கருத்து கேட்க உள்ளோம். அனைவரின் கருத்தும் அதுவாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஜெ.தீபாவை உள்பட யாரையும் இணைத்துக்கொள்ள அதிமுக தயார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…