ஆளுநர் மாளிகையில் இருந்து புகார்…!மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அதிரடி கைது…!
சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளா் நக்கீரன் கோபாலை காவல்துறையினர் கைது செய்தனர்.
நக்கீரன் பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் நக்கீரன் கோபால் ஆவார்.இவர் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து புனே செல்வதற்காக விமான நிலையம் வந்தார்.அப்போது திடீரென்று அங்கு வந்த காவல்துறையினர் நக்கீரன் கோபாலை கைது செய்தனர்.நக்கீரன் கோபாலை காவல்துறையினர் கைது செய்ததற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த புகார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. பத்திரிக்கையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது