கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்திய விமானப்படை சார்பில் பிரம்மோஸ் ஏவுகணையை சோதனை செய்யப்பட்டது.அந்த சோதனையில் மிக துல்லியமாக இலக்கை தாக்கி சாதனை படைத்தது.பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் சுகோய் -30MKI போர் விமானங்கள் விமானப்படைக்கு அதிக பலம் கொடுக்கும் என பிபின் ராவத் தெரிவித்தார்.
இந்தியாவின் முக்கிய விமானப்படை தளங்களில் களமிறக்க இந்திய பாதுகாப்பு படை முடிவெடுத்துள்ளது.அதன் ஒரு கட்டமாக இன்று தஞ்சையில் உள்ள விமானப்படை தளத்தில் 8 சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களின் ஒப்படைக்கப்பட்டது.
தென்னிந்தியாவின் முதல் அதிநவீன போர் விமானமாக சுகோய் – 30MKI விமானங்களை கருதப்படுகிறது. இந்த போர் விமானங்கள் பிரம்மோஸ் என்ற ஏவுகணைகளை சுமந்து சென்று செல்லக்கூடியது.இந்த போர் விமானங்களுக்கு ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 1500 கிலோமீட்டர் பயணம் செய்யக் கூடியது.
இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் நீர், நிலம் மற்றும் ஆகாயம் ஆகியவற்றிலிருந்து செலுத்த முடியும். பிரம்மோஸ் ஏவுகணைகள் ஒலியை விட 2.8 மடங்கு வேகத்தில் சென்று தாக்கக் கூடியது. இந்த போர் விமான அறிமுக விழாவில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விமானங்கள் விமானப்படை பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தாமல் இந்திய பெருங்கடலில் நடக்கும் முறைகேடுகளை கண்காணிக்கவும் பயன்படுத்த உள்ளனர். இதனால் தென்னிந்தியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பிபின் ராவத் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…