தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று பார்வையிட்டார்.
பின்னர் வன்முறையால் சேதப்படுத்தப்பட்ட தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பிறகு அவர் தூத்துக்குடியில் அமைதி திரும்ப எடுத்த நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை இயங்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காகவே மின் இணைப்பை துண்டித்து, தண்ணீர் வழங்குவதை அரசு நிறுத்தியுள்ளது. தொடர்ந்து நிரந்தரமாக மூட சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படவில்லை. போராட்டத்தை கட்டுப்படுத்த முதலில் வானத்தை நோக்கி சுடப்பட்டது. போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் வன்முறை ஏற்பட்டது.
துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதுபற்றிய விபரங்களை இப்போது கூற இயலாது. அதன் அறிக்கை வந்த பின்னர் இதுபற்றி தெரிவிக்கப்படும்.
94 நாட்களாக பொதுமக்களின் போராட்டத்திற்கு அரசு அனுமதி அளித்தது. இன்று இரவுக்கு மேல் இணையதள சேவை முடங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…