விடாத பாசிச பாசம்..!!பாய்கிறதா..?வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்..!தமிழக பிஜேபி தலைவர் தமிழிசையின் மீது..!!

ஆராய்ச்சி மாணவி சோபியாவின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் பேசிய தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய பட வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடிக்கு விமானத்திற்கு சென்றார். அவர் சென்ற விமானத்தில் பயணித்த சக பயணியான சோபியா என்ற இளம் பெண் தமிழிசையை நோக்கி, ‘பாசிச பாஜக ஒழிக’ என்று கோஷமிட்டார்.
இந்நிலையில் மாணவி சோபியாவை தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த ஹென்றி திபேன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது ”எழுத்தாளருக்கு என்னென்ன உரிமைகள் உள்ளனவோ அவை அனைத்தும் மாணவி சோபியாவுக்கும் உண்டு.
பிஜேபி தலைவர் தமிழிசை மீது அப்பொழுதே வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.மேலும் மிக மோசமான, தவறான வார்த்தைகளில் மாணவி சோபியாவை மிரட்டியதற்கும், உயிருக்கு ஆபத்தை உருவாக்குவோம் என்று சொன்னவர்களுக்கு கண்டிப்பாக எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவர்கள் அப்படி செய்யவில்லை.இதனால் இனியும் இதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.இந்த வழக்கு பாயும் பட்சத்தில் ஜாமீனில் கூட வரமுடியாத சூழ்நிலை உருவாகும்.
DIMASUVADU
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024