தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரம், சில்லமரத்துப்பட்டி, சிலமலை, தேவாரம், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏலக்காய் விவசாயிகளுக்கு பல ஆயிரக்கணக்கான ஏலக்காய் விவசாய தோட்டங்கள் கேரள மாநிலத்தில் உள்ளது.
கடந்த 4 நாட்களாக ஏலக்காய் விளையும் தோட்டங்கள் உள்ள கேரளா ஏலமுடி, பூப்பாறை, சாந்தாதாம்பாறை, கஜனாப்பாறை, சுண்டல், மூணாறு, வண்டன்மேடு உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழையும், சூறாவளி காற்றுடன் பெரும் மழையும் பெய்து வருகிறது.
இது சமயம் நேற்று வீசிய சூறாவளி காற்றுடன் கூடிய பெரும் மழையால் ஏலத்தோட்டங்களில் ஏலச்செடி நிழலுக்காக உள்ள பெரிய சிறிய மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாய்ந்த மரங்கள் அருகில் உள்ள ஏலச்செடிகளில் விழுந்து நாசம் ஆகின.
சூறாவளி காற்றால் ஏலச் செடிகள் ஒன்றுக்கொன்று முறுக்கி ஒடிந்து கீழே விழுந்துது உள்ளது. இதனால் தற்போது பறிக்கும் நிலையில் உள்ள ஏலக்காய், பழங்காய்கள், கருங்காய்கள், பிஞ்சுகள் பலத்த சேதம் அடைந்தன. இதை கண்ட ஏலக்காய் விவசாயிகள் மனமுடைந்து காணப்பட்டனர். கடன் வாங்கி ஏலக்காய் விவசாயம் செய்தவர்கள் குத்தகைக்கு எடுத்தவர்கள் பல லட்சகணக்கான ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டங்கள் வழியாகவும், தெருச்சாலைகள் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்லும் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சூறாவளி காற்றால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக ஏல விவசாயிகள் குடியிருக்கும் வீடுகள், ஏலக்காயை பதப்படுத்தும் ஸ்டோர்கள், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வீடுகள், கடைகள், ஓட்டல்களில் முற்றிலும் மின்சாரம் சப்ளை இல்லாமல் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.
ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் கேரள மாநில அரசு செயல்பட்டு தேனி மாவட்ட ஏலக்காய் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…