நான் மதிக்கும் மூத்த தலைவர்களில் ஒருவர் வாஜ்பாய் : வைகோ ..!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாயின் நலம் குறித்து நேரில் கேட்டறிந்தார் வைகோ.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்த அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான சோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறபட்டு உள்ளது. அவரது அலுவலக செயலாளர் மகேந்திர பாண்டே வெளியிட்டு உள்ள அறிக்கையில், டாக்டர்கள் அறிவுரையின் பேரில் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் வழக்கமான சோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று சேர்க்கப்பட்டு உள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கண்காணிப்பில் அவர் உள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமாக உள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கண்காணிப்பில் அவர் உள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது.
பின்னர் பேசிய வைகோ, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார் .வாஜ்பாயின் உடல் நலம் குறித்து கவலைப்பட தேவையில்லை என்று டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, வாஜ்பாய் உடல்நிலை குறித்து கவலை கொள்ள தேவையில்லை.
அவர் உடல்நலத்துடன் நன்றாகவே உள்ளார் என குறிப்பிட்டார். நான் மதிக்கும் மூத்த தலைவர்களில் ஒருவர் வாஜ்பாய் என்றார்.