நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்கள் பத்திரமாக மீட்ட கடலோர காவல்படையினர்!

Default Image

கடலோர காவல்படையினர் மீன் பிடிக்க சென்ற போது படகில் தண்ணீர் புகுந்து கடலில் தத்தளித்த காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் 9 பேரை  மீட்டு சென்னை அழைத்து வந்தனர்.

சென்னை காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் 9 பேர், விசைப்படகில் சென்னை கடற்கரையில் இருந்து 98 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடிக்கச் சென்றபோது  என்ஜின் அறையில் அதிக அளவு கடல் நீர் புகுந்துள்ளது.

இதனால்  படகை மேற்கொண்டு  செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு மீனவர்கள் 9 பேர் கடலில் தத்தளித்துள்ளனர்.  இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலோர காவல் படை வீரர்கள் விரைந்து சென்று சென்னையில் இருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் தந்தளித்து கொண்டிருந்த மீனவர்கள் 9 பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்