இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து,தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க எந்த 2 மணி நேரத்தில் என்பதை மாநில அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்தது.இதையடுத்து தமிழகத்தில் பட்டாசு வெடிக்க எப்போது அனுமதிப்பது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில் தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து அ நேற்று வெளியிடப்பட்டது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தது என்னவென்றால்:-தீமையினை நன்மை வென்றதை நினைவுபடுத்தும் விதமாகவும், நமது கலாசாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியா முழுவதும் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறோம்.
கடந்த 23-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய உத்தரவில், சுற்றுச் சூழலுக்கு உகந்த மூலப் பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும்,பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளிகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும். வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்து , தீபாவளி பண்டிகை அன்று இரவு 8 முதல் இரவு 10 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு சுப்ரீம்கோர்ட்டு நேரம் நிர்ணயம் செய்தது. இந்த 2 மணி நேரம் போதாது என்று கூடுதலாக 2 மணி நேரம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம்கோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.
தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்க இயலாது எனவும், பட்டாசுகளை வெடிப்பதற்கு எந்த 2 மணி நேரம் என தமிழக அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.எனவே சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி தமிழக அரசு தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்குகிறது என்று நேற்றைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
dinasuvadu.com
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…