இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
இந்தி மொழியால் உ,பி, பீகார் மாநிலங்களில் புழக்கத்தில் இருந்த வடமாநில மொழிகள் பெரும்பாலானவை அழிந்துவிட்டன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி கொள்கை மூலம், மும்மொழி கொள்கை, அதன் மூலம் மறைமுகமாக இந்தி மொழி திணிப்பை மத்திய அரசு மேற்கொள்கிறது என தமிழ்நாட்டில் ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி அதிமுக, நாதக, தவெக என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசு எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தமிழ்நாடு அரசு மும்மொழி கொள்கையை ஏற்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். இதனை தொடர்ந்து இன்று இந்தி மொழியால் மற்ற வடமாநில மொழிகள் அழிந்துவிட்டன என கூறி ஒரு பதிவை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சகோதரிகள் மற்றும் சகோதரர்களே..,
அதில், பிற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்புச் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே, இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, ப்ராஜ், புந்தேலி, கர்வாலி, குமாவோனி, மாகஹி, மார்வாரி, மால்வி, சத்தீஸ்கர்ஹி, சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, குர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல மொழிகள் உள்ளது.
ஒரு ஒற்றை இந்தி மொழியால் பண்டைய தாய்மொழிகளைக் கொல்லும். உ.பி.யும் பீகாரும் ஒருபோதும் இந்தி அங்கு தாய்மொழியாக இருந்ததில்லை. அவர்களின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்களாக இருக்கின்றன. இதனை முனைக்கூட்டியே அறிந்து இருப்பதால் தமிழகம் அதனை எதிர்க்கிறது.
தமிழ் விழித்தது, தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன, இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன. ” என பதிவிட்டுள்ளார்.
முகமூடி இந்தி :
மேலும், இந்தி என்பது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் உருவான மொழி. தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது.
இந்தியால் மறைந்த மொழிகள் :
ஆதிக்கத்தை உணர முடியாமல் போனவர்களின் தாய்மொழிகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கரைந்து காணாமல் போன துயர வரலாற்றை, இந்தி பரவிய நிலப்பரப்பெங்கும் காண முடியும். உ.பி, பீகார், ம.பி. ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, ராஜஸ்தான் என இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, பண்பாட்டு விழுமியங்களும், இலக்கியச் செழுமைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன.
இந்திய மொழிகள் மீதான அக்கறை?
திராவிட இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வினாலும், தொடர்ச்சியான போராட்டத்தினாலும் நம் தாய்த் தமிழ்மொழி காப்பாற்றப்பட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன. மும்மொழித் திட்டம் என்ற பெயரில் என்னென்ன மொழிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என அட்டவணையைப் பார்த்தால் பெரும்பாலான மாநிலங்களில் இந்தி அல்லது சமஸ்கிருதமே முன்னிலைப்படுத்தப்படுகிறது.
அன்றே செய்தார் அண்ணா :
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதுகுறித்து, திருச்சி சிவா எம்.பி, தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக ஏதேனும் விவரம் உள்ளதா? என்று எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 5-8-2021 அன்று அளித்த பதிலில், ஆசிரியர்கள் K.V. பள்ளிகளில் மாநில மொழிகளுக்கான ஆசிரிய நியமிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இதுதான் பா.ஜ.க அரசின் தமிழ் மீதான அக்கறை. ஆரியப் பண்பாட்டைத் திணிக்க எவர் முயற்சித்தாலும் அதற்கு இந்த மண்ணில் இடம் கிடையாது என்கிற வகையில் அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. அந்த வரலாற்றுப் பக்கத்தைப் புரட்டினால்தான் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களின் வஞ்சகத்தை இளையதலைமுறை புரிந்துகொள்ள முடியும் என பதிவிட்டுள்ளார்.
My dear sisters and brothers from other states,
Ever wondered how many Indian languages Hindi has swallowed? Bhojpuri, Maithili, Awadhi, Braj, Bundeli, Garhwali, Kumaoni, Magahi, Marwari, Malvi, Chhattisgarhi, Santhali, Angika, Ho, Kharia, Khortha, Kurmali, Kurukh, Mundari and… pic.twitter.com/VhkWtCDHV9
— M.K.Stalin (@mkstalin) February 27, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? சும்மா வதந்தி பரப்பாதீங்க..விளக்கம் கொடுத்த மகன்!
February 27, 2025
லோகேஷ் படத்தில் ஐட்டம் பாடல்! பூஜா ஹெக்டே வைத்து சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025