சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் கூடாது-தமிழக பத்திரப்பதிவுத்துறை…

தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள், பாத்தியப்பட்டவர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை என்று கூறியுள்ள பத்திரப்பதிவுத்துறை, இடைத்தரகர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடைத்தரகர் மூலம் அணுகினால் வேலை சீக்கிரம் முடிந்து விடும் என்பதால் பொது மக்கள் அவர்களை தேடி செல்கின்றனர். இதன் காரணமாக நிறைய லஞ்சமும், ஊழலும் நடப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை தடுக்கும் முயற்சியாகவே பத்திரப்பதிவு ?அலுவலகத்தில் இடைத்தரகர்களுக்கு அனுமதி இல்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடைச்சட்டம் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024