ஒருபுறம் காந்தியின் கொள்கை; மறுபுறம் கோட்சேயின் கொள்கைகளுக்கான தேர்தல் இது : மாணிக்கம் தாகூர்
- ஒருபுறம் காந்தியின் கொள்கை, மறுபுறம் கோட்சேயின் கொள்கைகளுக்கான தேர்தல் இது.
- மோடி அரசுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் என்றும் கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சியில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தி.மு.க கூட்டணியில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்திடம் வேட்புமனு தாக்கல்செய்தார். அப்போது பேசிய மாணிக்கம் தாகூர், ஒருபுறம் காந்தியின் கொள்கை, மறுபுறம் கோட்சேயின் கொள்கைகளுக்கான தேர்தல் இது. இந்தியா என்ற எண்ணமே தற்போது கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், மோடியின் தலைமையில், கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் விரோத செயல்கள் அரங்கேறியுள்ளன. விவசாயம், சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், மோடி அரசுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் என்றும் கூறியுள்ளார்.
மேலும், மோடியின் குற்றத்தை மட்டும் சொல்லி வாக்கு சேகரிக்க மாட்டோம் என்றும், மிக முக்கிய திட்டங்களை நாங்கள் முன்வைத்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.