திருப்பூர் பேருந்து நிறுத்தத்தில் இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த வடமாநில இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத் தில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் வசிக்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிவராஜ். இவர் நல்லூர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் செவ்வாயன்று திருப்பூர் அவிநாசி சாலையிலுள்ள குமார் நகர் பேருந்து நிறுத்தத்தில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பெண்களை செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்நிலையில் அதே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சுமார் 23 வயது மதிக்கதக்க இளம் பெண்னை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதையறிந்த அந்த பெண் அருகில் இருந்தவர்களிடம் கூறி உள்ளார். அவர் கூறியதை பார்த்த சிவராஜ் ஓட ஆரம்பித்தார். அருகில் இருந்தவர்கள் துரத்திப்பிடித்து சிவராஜின் செல்போனை பரிசோதித்ததில் அவர் பேருந்து நிறுத்ததில் இருந்த சில பெண்களை படம் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் சிவராஜை தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் அந்த இடத்தில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.
DINASUVADU
பெர்த் : ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளிடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி…
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…