இடைதேர்தல் தொடங்கும் முன் தொடங்கியது பணப்பட்டுவடா…..!!!அதிர்ச்சியில் மற்ற கட்சிகள்..!!

Default Image

இடைதேர்தல் நடைபெறும் முன்னரே பணப்பட்டுவடா தொடங்கிவிட்டது.தேர்தல் ஆணையம் பணப்பட்டுவடாவை எத்தணை விதிமுறைகளை வைத்து தடுத்தாலும் அத்தடுப்பு வேலியை தகர்த்து அரசியல் கட்சிகள் தங்களின் வேலை எப்பொழுதும் போல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அடிதட்டு மக்களை வெறும் அற்ப பணத்தை கொடுத்து 5 ஆண்டு ஆட்சியை பிடிக்க எத்தனை தில்லுமுல்லு செய்கிறார்கள்.

Image result for ஓட்டுக்கு பணம் வாங்குவது

 

தேர்தலுக்கு வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் அந்த கடமை இன்று பணம் கொடுத்தால் தான் வாக்களிப்போம்,ஒட்டுபோடுவோம் என்று அடித்தட்டு மக்களை மாற்றியுள்ளது.

Image result for ஓட்டுக்கு பணம்

ஓட்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்றும் தங்களின் விரலில் வைக்கின்ற மை தலைமையை உருவாக்கும் ஆற்றல் உடையது என்பதை அறியாமல் அற்ப பணத்திற்காக இப்படி தங்களின் வாக்கை விற்பது வேதனை அளிப்பதாகவும் அவர்களின் அறியாண்மையை எடுத்துரைப்பதாக உள்ளது.இதே போல் பணத்திற்காக ஓட்டு போட்டு கொண்டிருந்தால் எப்படி நல்ல ஜனநாயகத்தை உருவாக்க முடியும் என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

Related image

 

தமிழகத்தில் 20 தொகுதிகள் எம்.எல்.ஏ இன்றி காலியாக உள்ளது இந்த தொகுதிக்கான இடைதேர்தல் விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் தான் தொகுதிகளின் இடைதேர்தல் தொடங்கும் முன்னே இடையில் பணப்பட்டுவடாவும் தொடங்கிவிட்டது.

Related image

பூவிருந்தவல்லி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவுப்பு வெளியாகும் முன்னே அதிமுக பணப்பட்டுவாடா செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அகட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தை அமைச்சர்கள்  அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுநடத்தியுள்ளனர்.மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கிளை நிர்வாகிகள் 1000 பேருக்கும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. பணம் கிடைக்காத அதிமுக கிளை நிர்வாகிகள் எதிர்ப்பால் கூட்டத்தில் பெருத்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Related image

 

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்