அதிமுக பிரமுகரை வெளுத்து வாங்கிய போலீஸ்….!!

Default Image
மணப்பாறை அருகே அதிமுக பிரமுகர் ஒருவர் ஓவராக பேசியதால் அவரை காவல் அதிகாரி பொளந்துகட்டியது.
மணப்பாறை அருகே கருங்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் ஒரு அதிமுக பிரமுகர், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணைச்செயலாளராகவும், 4 முறை மாவட்ட கவுன்சிலராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில் அவரின் சொந்த பிரச்சனையின் காரணமாக மணப்பாறை காவல் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் கென்னடியிடம் பேச முற்பட்டார். ஆனால் கென்னடி பழனிசாமியிடம், அவசரமா டிஎஸ்பி-யை பார்க்க கிளம்பிட்டு இருக்கேன் போய்ட்டு வந்து உங்ககிட்ட பேசறேன் சார் எனக் கூறினார்.
Image result for போலீஸ் அடி .
இதனால் ஆத்திரமடைந்த பழனிசாமி நான் யாருன்னு தெரியாம பேசுர என கென்னடியிடம் மிரட்டல் தொனியில் பேசினார். இதற்கு பதிலளித்த கென்னடி அவசரமா வெளியே போகிறேன் சார். உடனே வந்துடறேன்  கம்ப்ளைண்ட் மட்டும் கொடுங்க என்றார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த பழனிசாமி கென்னடியை ஒருமையில் திட்டினார்.
Image result for போலீஸ் அடி .
இதனைக்கேட்டு கடுமையாக கோபமடைந்த கென்னடி என் ஸ்டேஷன்ல வந்து என்னையே திட்டுரீயா, என பழனிசாமியை சரமாரியாக அடித்து உதைத்தார். உடனடியாக கிழிந்த சட்டையுடன் பழனிசாமி ஸ்டேஷனுக்கு வெளியே ஓடி வந்தார். அவரைப் பார்த்த அவரது ஆதரவாளர்கள் உடனடியாக 100 பேரை சேர்த்துக் கொண்டு ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை டிஎஸ்பி ஆசைத்தம்பி கென்னடி மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்னபிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்