உத்தரபிரதேச வருவாய்த்துறை அமைச்சர் விஜய் காஷ்யப் கொரோனாவால் உயிரிழப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தின் வருவாய் துறை மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு அமைச்சர் காஷ்யப் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தன் செல்கிறது.
ஏற்கனவே உத்திரப்பிரதேசத்தில் கொரோனா காரணமாக அமைச்சர் கமல் ராணி வருண் மற்றும் சேதம் சவுகான் ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் 56 வயதுடைய உத்தரபிரதேச மாநிலத்தின் வருவாய் துறை மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு துறை அமைச்சர் விஜய் காஷ்யப் குர்கான் அவர்கலும் தற்பொழுது கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார். முசாபர்நகரில் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த இவர் கடந்த சில தினங்களாக உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.
இருப்பினும் இன்று விஜய் காஷ்யப் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பாஜக சார்பில் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்களும் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் காஷ்யப் அவர்களின் மரணம் தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும், எப்பொழுதும் பொதுநலன் சார்ந்த பணிகளில் அர்ப்பணிப்புடன் இருந்த அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், ஓம் சாந்தி எனவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
भाजपा नेता और उत्तर प्रदेश सरकार में मंत्री विजय कश्यप जी के निधन से अत्यंत दुख हुआ है। वे जमीन से जुड़े नेता थे और सदा जनहित के कार्यों में समर्पित रहे। शोक की इस घड़ी में उनके परिजनों और प्रशंसकों के प्रति मेरी संवेदनाएं। ओम शांति!
— Narendra Modi (@narendramodi) May 18, 2021