மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்க இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) 6 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

West Bengal By Polls

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இதில் 5 தொகுதிகள் திரிணாமுல் காங்கிரஸ் வசமும், ஒரு தொகுதி பாஜக வசமும் இருந்தன.

அதாவது, மதரிஹட் என்கிற தொகுதி பாஜகவின் கோட்டையாக உள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், எ.ஜி.கர் மருத்துவ மாணவி கொலை விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலமரசுக்கு எதிராக இருந்தும் அந்தக் கட்சி தேர்தலில் வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ளது.

அதன்படி, மேற்கு வங்கத்தின் நைஹாட்டி, ஹரோவா, மெதினிபூர், தல்தாங்ரா, சீதை, மற்றும் மதரிஹாட் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரி சம்பவம், ஒரு மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் என அனைத்தையும் எதிர்கட்சியினர் சுட்டிக்காட்டி தேரதலில் களம் கண்டனர். ஆனால், இறுதியில் இடைத்தேர்தல் முடிவுகள், மம்தா பானர்ஜியின் தலைமையின் மீதான நம்பிக்கையை வாக்காளர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்