5 பென்ஸ் கார்களுடன் சென்ற லாரியை மறித்து கடத்திய கும்பலை விரட்டி பிடித்த காவல்துறையினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் ஹரியானா மாநிலத்தில் ஐந்து புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை கண்டெய்னர் லாரி ஒன்று ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த லாரியை கொள்ளை கும்பல் ஒன்று துப்பாக்கியுடன் மறித்து லாரி ஓட்டுநரை கயிறால் கட்டிப் போட்டு விட்டு, உள்ளே இருந்த கார்களுடன் கண்டெய்னர் லாரியை கடத்திச் சென்றுள்ளது. இந்நிலையில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சாலையில் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக அங்கிருந்த சிலர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து தனிப்படை அமைத்து லாரியை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது நுஜ் மாவட்டத்திலுள்ள நாய் நகர் எனுமிடத்தில் வசிக்கக்கூடிய ரஸாக் என்பவர்தான் கும்பலின் தலைவன் என்பது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லாரி எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பது குறித்து கண்டறியப்பட்டு உள்ளது. அதனை அடுத்து விரட்டிப் பிடித்து கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற கும்பலை லாரியுடன் பிடித்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். லாரியில் இருந்த ஐந்து கார்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் கடத்தல் தொடர்பாக கொள்ளை கும்பலிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…