மக்களவை தேர்தல்… முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள்!
Lok Sabha Elections : நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். அதன்படி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
Read More – மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
முதல் கட்ட தேர்தளுக்கான வாக்குப்பதிவு ஏப்.19-ம் தேதி தொடங்கும் நிலையில், ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை அடுத்து ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Read More – ராகுல் காந்தியின் ஒற்றுமை நியாய யாத்திரை நிறைவு.! மும்பைக்கு விரையும் தலைவர்கள்…
இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி, அருணாச்சல பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவு, ஆந்திரா, சண்டிகர், ஹரியானா, டெல்லி, கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், கேரளா, லச்சத்தீவு, லடாக், மிசோரம், மேகாலயா, நாகலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு, பஞ்சாப், தெலுங்கானா, உத்தராகண்ட் ஆகிய இடங்களில் ஏப்,19 ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Read More – மதுபான கொள்கை வழக்கு.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…!
இதில், நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தலின் போது தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முதற்கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20 தேதியும், வேட்புமனு தாக்கல் நிறைவு நாள் மார்ச் 27 தேதியும், வேட்புமனு பரிசீலனை மார்ச் 28 தேதியும், வேட்புமனு வாபஸ் பெறுவது மார்ச் 30 தேதியும் நடைபெறுகிறது.