சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் (நவமபர்) 16ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு, அடுத்த நாளான நவம்பர் 17, கார்த்திகை 1ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அன்றிலிருந்து சரியாக 41 நாள் (ஒரு மண்டலம்) கழித்து கடந்த டிசம்பர் 27, மார்கழி மாதம் 11ஆம் தேதி அன்று மண்டல பூஜைவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வழக்கத்தை விட இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மண்டல பூஜையன்று மட்டும் பக்த்ர்கள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையானது 70 ஆயிரமாக குறைக்கப்பட்டு இருந்தது. மண்டல பூஜை முடிந்து அன்று இரவு 11 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டது.
அதனை அடுத்து மகரஜோதி தரிசனத்திற்காக, மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது இன்று (டிசம்பர் 30) மாலை திறக்கப்பட உள்ளது. இன்று மாலை சபரிமலை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு நாளை (டிசம்பர் 31) முதல் வழக்கம் போல பக்த்ர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஜனவரி 15 ஆம் தேதி, தை 1ஆம் நாள் மகர ஜோதி பொன்னம்பலமேட்டில் ஏற்றப்படும். இந்த நிகழ்வானது சபரிமலை ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்கள் வருகையை காண்பதாக ஐதீகம். அதற்க்கடுத்து ஜனவரி 20ஆம் தேதி வரையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும். அன்று இரவு ஹரிவராசனம் நிறைவு பெற்ற பின்னர் நடை சாத்தப்படும்.
மீண்டும் ஒவ்வொரு தமிழ் மதமும் முதல் 5 நாட்கள் மட்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் பக்த்ர்கள் வருகைக்காக திறக்கப்படும். அப்போது பக்க்தர்கள் சிறுவழிப்பாதை (பம்பை) வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர். பெருவழி எனும் காட்டுப்பாதை கார்த்திகை, மார்கழி என இரு மாதங்களுக்கு மட்டுமே திறந்து இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
மகர ஜோதி தரிசனதிற்க்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு கோயில் வளாகம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி உள்ளிட்ட கோயில் பகுதிகள் அனைத்தும் தண்ணீர் பீய்ச்சியடித்து சுத்தம் செய்யப்படுகின்றன.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…