காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் வர வேண்டும் – பிரியங்கா காந்தி
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் வர விரும்புவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததன் எதிரொலியாக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த ராகுல் காந்தி தனது பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அவரது பேட்டியில்,காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் வர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.இந்த கருத்தில் நானும் ராகுலும் முழுமையாக உடன்படுகிறோம்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடுத்த தலைவர் யார் என்பதை தீர்மானிப்பார்கள்.