110 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடந்த நிசர்கா..!

Published by
கெளதம்

அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல், தற்பொழுது மும்பையில் உள்ள அலிபாக் அருகே கரையை கடந்ததாகவும், கடக்கும்போது 100-110 கி.மி. வேகத்தில் காற்று வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம், நேற்று மதியம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் “நிகர்சா” என பெயரிட்டது. இந்த நிகர்சா புயல், இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், தற்பொழுது அலிபாக் அருகே ஆக்ரோஷமாக கரையை கடக்க தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த நிசர்கா புயலானது, தற்பொழுது அலிபாக் அருகே மணிக்கு 100-110 கி.மி. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிதீவிர புயலான நிசர்கா, தற்பொழுது புயலாக வலுவிழந்தது. மேலும், 23 கி.மி. வேகத்தில் வடக்கு திசையில் நகர்கிறது. மேலும், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. 

Published by
கெளதம்

Recent Posts

‘சீமான் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ – டிஐஜி வருண்குமார்!

‘சீமான் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ – டிஐஜி வருண்குமார்!

சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…

11 minutes ago

கைது செய்வது தான் ஜனநாயகமா? தவெகவினர் கைதுக்கு விஜய் கடும் கண்டனம்.!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…

1 hour ago

கைது செய்யப்பட்ட தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தொண்டர்கள் விடுதலை.!

சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…

2 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (31/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை :  GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…

2 hours ago

திருவள்ளுவர் சிலை – விவேகானந்தார் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலம் திறப்பு!

கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இரண்டு…

2 hours ago

பழங்கள் வாங்க போறீங்களா.? அப்போ இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க..!

பழங்களை வாங்கும் போது அவற்றை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…

2 hours ago