கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு முகமை வரமாக இருக்கும் – மோடி

Default Image

தேசிய பணியாளர் முகமை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய பணியாளர் முகமைக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மத்திய அரசு பணிகளில் பணியாளர்களை தேர்வு செய்ய தேசிய பணியாளர் முகமைகயை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, தேசிய பணியாளர் முகமைக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது நாடு முழுவதும் பொதுத்தகுதி தேர்வை நடத்தும், இதன்மூலம் நாட்டில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.

இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி, அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தேசிய பணியாளர் முகமை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பொதுவான தகுதித்தேர்வு நடத்தப்படுவதன் மூலம் பல சோதனைகளை அகற்றி, விலைமதிப்பற்ற நேரத்தையும் வளங்களையும் மிச்சப்படுத்தும். மேலும் இது வெளிப்படைத்தன்மைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்