இந்தியாவில் வெளிநாட்டவர் 11 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு தங்கி இருந்தால் மட்டுமே அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். தற்போது இந்த முறையில் சட்ட திருத்தும் கொண்டு வந்து, அதாவது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வந்து தங்கியிருக்கும் முஸ்லீம் அல்லாத மற்ற மதத்தினர்கள் 6 ஆண்டுகள் தங்கியிருந்தாலே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் படி மசோதா, மத்திய அரசால் மக்களவையில் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பலர் ஆதரவும், பலர் எதிர்ப்பு குரலும் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான அப்துர் ரஹ்மான் என்பவர், இந்த குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் கூறியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘ இந்த மசோதாவிற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதனால். நான் எனது பணியை இன்று முதல் தொடரப்போவதில்லை. நாளை முதல் நாளை முதல் அலுவலகத்திற்கு வர மாட்டேன். என்னுடன் சேர்ந்து பணியாற்ற நினைத்த அதிகாரிகளுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இஸ்லாமியர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கு ஆதரவாகவும் ஜனநாயக முறையில் இந்த சட்ட திருத்த மசோதா இருக்க வேண்டும். இந்த சட்ட மசோதா எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் மதச்சார்பின்மையை உடைக்கும் முயற்சி ஏற்புடையது அல்ல. ஆதலால் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன். சமூக ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் இந்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்த்து போராட வேண்டும்
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…