“2024-லும் மோடி தான் பிரதமர்” – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

2024ல் மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக வருவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு.
2024ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராவார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அமித் ஷா, அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மற்றும் நக்சல் ஆகிய 3 முக்கிய இடங்கள் தொடர்பான பிரச்சனைகள் பெருமளவில் தீர்க்கப்பட்டுவிட்டதாக கூறினார்.
பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதிகளுக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதால், எந்த ஒரு வெளிநாட்டு சக்தியும் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடத் துணியவில்லை. நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நான் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றுள்ளேன்.
மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்பதையும், தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார் என்பதையும் உணர்ந்துள்ளேன். 2024 பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 2019-ஐ விட அதிகமான இடங்கள் கிடைக்கும் என்றும் பாஜக 303 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024