ஹோலி அன்று ஜப்பான் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்; 3 பேர் கைது.!

டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 22 வயதான ஜப்பானிய பெண், ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
டெல்லியில் ஜப்பான் சுற்றுலாப் பயணியான 22 வயது பெண் ஒருவர் ஹோலி பண்டிகை அன்று, கொண்டாட்டத்தின் போது சில நபர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார், இதனையடுத்து அந்த ஜப்பான் பெண், தான் பங்களாதேஷ் வந்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் தற்பொழுது உடல் மற்றும் மன ரீதியாக நன்றாக இருக்கிறேன், இது ஒரு தீவிரமான சூழ்நிலை என்பதை எனக்குத் தெரியாததற்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த நபர்கள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கூறிய டெல்லி போலீசார், ஜப்பான் சுற்றுலா பயணி தரப்பில் இதுவரை எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் அந்த பெண் குறித்த விவரங்களுக்கு, ஜப்பான் தூதரகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பஹார் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த வாலிபர் உட்பட 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர், மேலும் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!
December 21, 2024
அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!
December 21, 2024
பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…
December 21, 2024
ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…
December 21, 2024
தைப்பூசம் 2025 இல் எப்போது வருகிறது தெரியுமா?.
December 21, 2024