நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் வெற்றிபெற்றது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.நேற்று பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி கலந்துகொண்டனர்.
பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் முடிவு செய்தனர்.ஆனால் நேற்று ஜெகன் மோகன் ரெட்டியின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் கலந்து கொண்டனர்.இதன் பின் ஜெகன் ஸ்டாலின் மற்றும் சந்திர சேகர ராவிற்கு மதிய விருந்து அளித்தார்.இதன் பின்னர் மோடி பதவி ஏற்புவிழாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர் .ஆனால் மதிய உணவு முடிய நேரமானதாக கூறப்படுகிறது.இருந்தாலும் இதன் பின் தனி விமானம் மூலம் டெல்லி செல்ல இருவரும் முடிவு செய்தனர். அதேவேளையில் வெளிநாட்டு தலைவர்கள் வருகையையொட்டி டெல்லி விமான நிலையத்தில் சிறப்பு விமானம் இறங்க அனுமதி வழங்க முடியாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனால் இருவரும் பிரதமரின் பதவி ஏற்பு விழாவிற்கு பங்கேற்க முடியாமல் போனது..
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…