ஈஷா மகாசிவராத்திரி – பக்தியின் மகாகும்பமேளா! சத்குருவைப் பாராட்டிய அமித்ஷா
"மண் காப்போம்" இயக்கத்தில் சத்குரு எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் என ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொன்டு அடுத்த நாள் காலை 6 மணி வரை தியானம் மேற்கொள்வார். அப்படி தான் இந்த முறை ஈஷா யோகா மையத்தில் நேற்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா தொடங்கி இன்று அதிகாலை 6 மணி வரை கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவே 8:50 மணிக்கு கோவை பீளமேடு விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.அங்கு வருகை தந்த அவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து, ஈஷா மையத்திற்கு நேற்று இரவு 6 மணிக்கே வருகை தந்தார்.
வருகை தந்த அவருக்கு சத்குரு திருவைந்தெழுத்து மகா மந்திரத்தை தீட்சையாக வழங்கினார். அதன்பிறகு அங்கிருந்த தியானலிங்கத்திற்கு விசேஷ ஆராதனை செய்து வழிபாடு செய்துகொண்டார். அதைப்போல, பைரவிதேவிக்கு சிறப்பு பூஜை செய்ததுடன், சத்குருவுடன் சேர்ந்து நாகபூஜை வழிபாடிலும் பங்கேற்றார்.
பிறகு மக்களுக்கு மத்தியில் பேசிய அமித்ஷா ஈஷா மகா சிவராத்திரி விழாவை பக்தியின் மகா கும்பமேளாவாகப் புகழ்ந்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” மகாசிவராத்திரி விழாவை பக்தியின் மகாகும்பமேளா போன்று நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்குரு “ஒரு லட்சியத்தோடு இயங்கும் ஞானி”. அந்த அளவுக்கு சிறப்பாக பணியாற்றி கொண்டு இருக்கிறார்.
உலகத்தை மாற்ற வேண்டும் என்றால், முதலில் நம்மை மாற்ற வேண்டும் இதனை நமக்கு சத்குரு உணர்த்தி வருவதாக நான் நினைக்கிறேன். “மண் காப்போம்” இயக்கத்தில் சத்குரு எடுத்த முயற்சிகளை பற்றி நான் சொல்லவேண்டாம். அதற்காகவும் அவருக்கு நான் பாராட்டுகளை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன். ஆதியோகி தரிசனம் பெரும் பாக்கியம் எனக் கூறி, யோகா, தியானத்தால் ஈஷா பல லட்சம் மக்களை நல்வழிப்படுத்தி வருவதாகவும் அமித்ஷா பாராட்டினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025