“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!
வயநாட்டில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றதற்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா ட்வீட் செய்துள்ளார்.
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி களமிறங்கினார்.
அவருக்கு போட்டியாக கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். முதன்முறையாக தேர்தல் களத்தில் நிற்கும் பிரியங்காவை இந்தியாவே உற்று நோக்கி வருகிறது.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தற்போது பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் வரை பெற்றுள்ளார். அவர் கிட்டத்தட்ட 4 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
வயநாடு மக்களுக்கு பிரியங்கா நன்றி
இந்த நிலையில், வெற்றியை பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “எனது வெற்றி வயநாடு மக்களின் வெற்றி. மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. மிகவும் துணிச்சல் வாய்ந்த எனது சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி. எனக்கு வழிகாட்டியாக இருந்து என்னை வழிநடத்திய ராகுலுக்கு நன்றி. நாடாளுமன்றத்தில் வயநாடு குரலாக ஒலிப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
My dearest sisters and brothers of Wayanad,
I am overwhelmed with gratitude for the trust you have placed in me. I will make sure that over time, you truly feel this victory has been your victory and the person you chose to represent you understands your hopes and dreams and…— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 23, 2024
சாதனை படைத்த பிரியங்கா காந்தி
கேரளா வயநாடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 4,08,036 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு. கடந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி 3,61,705 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தை பெற்றார். ஆனால், தற்போது பிரியங்கா 4,08,036 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.