மத்திய அரசு மற்றும் அசாம் அரசு உள்கட்டமைப்பை உருவாக்க ஒத்துழைப்புடன் செயல்படுகின்றது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்று அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். தெமாஜியில் சிலாபத்தர் என்னுமிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,பிரதமர் மோடி முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதன் பின் பிரதமர் மோடி பேசுகையில்,மத்திய அரசு மற்றும் அசாம் அரசு உள்கட்டமைப்பை உருவாக்க ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. மாநிலத்திற்கு பெரும் ஆற்றல் இருந்தபோதிலும், இதற்கு முன் ஆட்சி செய்த அரசுகள் பல்வேறு துறைகளில் வளர்ச்சியைக் கவனிக்கவில்லை. அசாமின் தேநீர், சுற்றுலா, கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் மாநிலத்தின் தன்னம்பிக்கையை பலப்படுத்தும்.போகிபீல் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பிரம்மபுத்திராவில் உள்ள கலியபொமோரா பாலம் அசாமின் இணைப்பை மேம்படுத்தும். நான்கு வழிச்சாலையான தேசிய நெடுஞ்சாலை பணிகளும் நடந்து வருகின்றன.
அசாம் அரசாங்கத்தின் முயற்சிகள் காரணமாக, மாநிலத்தில் 20 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. புதிய தேசிய கல்விக் கொள்கையை விரைவாக நடைமுறைப்படுத்துவதில் மாநிலமும் செயல்படுகிறது. தேயிலை தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் பழங்குடி மக்களுக்கு பயனளிக்கும் பிராந்திய மொழியில் கல்வியில் தேசிய கல்விக் கொள்கை கவனம் செலுத்துகிறது என்று பேசினார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…