ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவோருக்கு மின்னணு விசா….!

Default Image

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவோருக்கு மின்னணு விசா முறையை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தீவிரவாதிகள் வசம் ஆட்சி போய்விட்டதால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை மீட்கும் பணிகளை உலக நாடுகள் தொடங்கியுள்ளன.

இந்த வகையில் இந்தியாவும் அங்குள்ள நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் 129 பேருடன் ஒரு விமானம் இந்தியா வந்துள்ள நிலையில், நேற்று காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டது. இன்று அதிகாலை மீண்டும் கபூல் விமான நிலையம் திறக்கப்பட்டது.

தற்பொழுதும் 120 இந்திய அதிகாரிகளுடன் கபூலில் இருந்து இந்தியாவிற்கு இரண்டாவது விமானம் புறப்பட்டு உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைனில் விசா பெறலாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக இந்தியாவிற்குள் நுழைய விரைவாக விசா வழங்க முடியும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்