அதானி, மணிப்பூர் விவகாரம்.., எதிர்க்கட்சிகள் அமளி! ஒரு வாரமாக முடங்கிய நாடாளுமன்றம்!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இரு நாடாளுமன்ற அவைகளும் வரும் நவம்பர் 2ஆம் தேதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Parilament

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த வார தொடக்கத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி துவங்கபட்டது. கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பே நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் விவாதம் நடத்த இரு அவை சபாநாயகர்களும் அனுமதி தரவில்லை என கூறி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் இந்த வாரம் முழுக்க (செவ்வாய் கிழமை அரசியல் சாசன தினம் தவிர்த்து) நாடாளுமன்றம் எதிர்கட்சியினரின் அமளி காரணமாக ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இன்றும் இரு அவைகளும் தொடங்கியது முதல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் முதலில் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற இரு அவைகளும், அடுத்து மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் முடங்கியது. இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு பின்னர், நவம்பர் 2 காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக இரு அவை சபாநாயகர்களும் அறிவித்துவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - Cyclone to Conference
thol thirumavalavan amit shah
vidaamuyarchi teaser
rain TN
Heavy rain
Ricky Ponting
Parilament