முன்னிலையில் பாஜக! பின்தொடரும் காங்கிரஸ்! தேர்தல் நிலவரம் இதோ… 

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் கூட்டணி அதற்கு இடத்தில் தொடர்ந்து வருகிறது.

Congress - BJP

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகிறது. இதில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் காலை 9 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி 110 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.

அதேபோல, காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகதி கூட்டணி 74 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகின்றன . மற்ற கட்சிகள் 10 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரை பாஜக தலைமையிலான NDA கூட்டணி 35 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 26 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்