2019 மக்களவை தேர்தல் :டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது …!

Default Image

 டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியுள்ளது.  

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத் தொடரின்போது முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியுள்ளது. 

Image result for OPPOSITE PARTY BJP


2019 மக்களவை தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ், திரிணாமுல் காங்., இடதுசாரிகள், தேசியவாத காங்., தெலுங்குதேசம், திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றது. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் முகாமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்