Categories: இந்தியா

கெடு முடிய போகிறது……..இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா…அடிபணியுமா இந்தியா…???உற்று நோக்கும் நாடுகள்…!!

Published by
kavitha
உங்களின் கெடு முடிய போகிறது என்று இந்தியாவிற்கு  அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
Related image
இந்தியா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவெடுத்தது.இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவெடுத்தது. நாட்டாமைகாரன் என்று சொல்லப்படும் அமெரிக்கா இந்த விவகாரத்திலும் மூக்கை நுழைத்தது.அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவில்  பதவியேற்ற பிறகு ஈரானுடன் மோதல் போக்கு அதிகமானது. ஆத்திரக்கார ,சர்ச்சை அதிபர் என்று சொல்லப்படும் டிரம்ப் ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் ஒரு பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார்.
இதன் பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்தை முறித்த அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.அமெரிக்கா விலகினால் என்ன நாங்கள் அந்த ஒப்பந்தத்தில் இருக்கிறோம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.விலகிய அதிலிருந்து வெளியேறிய அமெரிக்க கடுங்கோபத்தில் இருந்தது இதனை வெளிபடுத்தும் விதமாக ஈரான் நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை  விதித்தும் குவித்தும் வருகிறது.ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளை தனது அதிகார நாட்டமை தனத்தை காட்டி மிரட்டு வருகிறது.

அந்த மிரட்டல்  இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று  ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.இதனிடையே இந்தியாவிற்கு நாட்டாமைக்காரன் அமெரிக்கா விதித்த கெடு முடிவடைய இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன அதன் பிறகு பொருளாதார தடையை அந்த நாடுகள் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு இந்தியா இம்மியள கூட பயப்படமால் அமெரிக்காவின் மிரட்டலுக்கு காது கொடுக்காமல் ஈரானிடம் கச்ச எண்ணெயை வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கெனவே தெரிவித்தார்.

இந்தியாவை சீண்டும் வகையில் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது அமெரிக்கா அதில் ஈரானிடம் இருந்து மத்த நாடுகள் கச்சா எண்ணெயை வாங்கக் கூடாது என்பதை நாங்கள் தொடர்ந்து அறை கூவல் விடுத்து வருகிறோம். அணுசக்தி ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் வீதிமீறலில் ஈடுபடும் ஈரானுக்கு தக்க பாடம் புகட்ட  பட வேண்டும்.இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். என்று நாங்கள் இது தொடர்பாக விதித்த கெடு முடிய 10 நாட்கள் மட்டுமே உள்ளது. அதற்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகளும் அதனை முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.இதில எந்த மாற்றமும் இல்லை.

அப்படி நாங்கள் கூறியதை கேட்கவில்லை என்றால் கடுமையான பொருளாதார தடைகளை நாடு எதிர்கொள்ள வேண்டும். எண்ணெயை வழங்கும் ஈரானுக்கும் கூடுதலாக தடைகளை விதிக்க நாங்கள் முடிவு எடுத்து உள்ளோம் என அமெரிக்க அதிபர் அறை கூவல் விடுத்துள்ளார்.இந்த மீரட்டலுக்கு இந்திய அடிபணியாது என்று மத்திய அமைச்சர் தெரிவிக்கும் விதத்தில் இருந்தாலும் நாட்டமைக்கார அமெரிக்காவை  நாடு இப்படி எதிர்கொள்ள போகிறது.இதனால் நாட்டிற்கு பொருளாதார தடை ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்ளும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் இந்த விவகாரத்தை உற்று நோக்கி வருகின்றனர்.
DINASUVADU
Published by
kavitha

Recent Posts

“இழிவா பேசாதீங்க”..மணிமேகலை VS பிரியங்கா பிரச்சினை குறித்து கொந்தளித்த நிஷா!

சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…

35 mins ago

தெரிக்கவிடலாமா.. துபாயில் ரேஸ் காரை ஓட்டி பார்த்த நடிகர் அஜித்.!

சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…

36 mins ago

3 ஏ.டி.எம் கொள்ளை., ரூ.65 லட்சம் பணம்.! கேரளா போலீஸ் பரபரப்பு தகவல்கள்…

நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…

46 mins ago

சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…

50 mins ago

நவராத்திரி ஸ்பெஷல்.. நவராத்திரி பூஜையில் வைக்கபடும் 9 வகை சாதங்கள் எது தெரியுமா ?

சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள்  படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…

53 mins ago

ஆர்த்தியுடன் விவாகரத்து முடிவு! மும்பையில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி?

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக…

1 hour ago