இந்தியாவில் 1339 பதிவு செய்யாத சிறார் காப்பகங்கள்..!அதிர்ச்சி தகவல்..!!

Default Image

நாடு முழுவதும் ஆயிரத்து 339 பதிவு பெறாத சிறார் காப்பகங்கள் செயல்பட்டு வருவது அதிர்ச்சிகர தகவல் தெரியவந்துள்ளது.
பீகாரின் முசாபர்பூர், உத்தரப்பிரதேசத்தின் தியோரியா ஆகிய இடங்களில் காப்பகங்களில் உள்ள சிறுமிகள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், சிறார் காப்பகங்களில் ஆய்வு நடத்தும்படி அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் கணக்குப்படி ஐயாயிரத்து 850 பதிவுபெற்ற காப்பகங்களும் ஆயிரத்து 339 பதிவு பெறாத காப்பகங்களும் உள்ளன. பதிவுபெறாத காப்பகங்களை டிசம்பர் 31க்குள் பதிவு செய்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. பீகாரில் 71சிறார் காப்பகங்களும், உத்தரப்பிரதேசத்தில் 231 சிறார் காப்பகங்களும் பதிவு பெற்றுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்