நெடுஞ்சாலைக்கு மேலே, மிக அருகில் செல்லும் விமானங்களால் ஆபத்து ஏற்படும் என, பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலைக்கு மேலே, மிக அருகில் செல்லும் விமானங்களால் ஆபத்து ஏற்படும் என, பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி, சுற்றுச்சுவரில் விமானம் ஒன்று மோதிச் சென்றது. ஓடு தளத்தை விரிவாக்கம் செய்யாதது தான் காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு குறுக்காகவே, திருச்சி விமான நிலையத்தில் ஓடுதளம் […]
திருச்சியில் மஹாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் அனிதா பேட்டியளித்துள்ளார். இதை அவர் கூறியதாவது, அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாவும், திருச்சி மாவட்டத்தி டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை எனவும் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில், வீடுகளில் உள்ள மக்கும் குப்பையை சேகரித்து உரமாக்கி வருகின்றனர். இந்த முறையை அனைவரும் கையாள வேண்டும் வேண்டும் என்ற நோக்கில், இதனை ஊக்கப்படுத்தும் வகையில் மூவருக்கு தங்க பரிசு வழங்கப்படுகிறது. இதன்படி வீடுகளில் குப்பையை உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவோர், அதனை வீடியோ அல்லது போட்டோவாக ஸ்மார்ட் சிட்டி என்ற ஆப்பில் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதில் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுவோருக்கு தங்க பரிசு வழங்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
மணல் கடத்தலை தடுக்க வருவாய் மற்றும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணி நமது மண், நமது மானம், நமது உரிமை என்ற தலைப்பில் நடைபெற்றது. இப்பேரணியை திருச்சி கோட்டாட்சியர் அன்பழகன் தொடக்கி வைத்தார். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கிளியூரிலிருந்து பனையகுறிச்சி வரை மணல் கடத்தல் தடுப்பு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் ஆற்றக்கரையோர பகுதி மக்களின் பாதுகாப்பிற்க்காக அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறுகையில் திருச்சி மாவட்டத்தில், காவிரி, கொள்ளிடம் ஆற்றக்கரையோர பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது.ஏரி, குளம், கண்மாய் மற்றும் காவிரி ஆற்றுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மழை காரணமாக, முக்கொம்பு தற்காலிக தடுப்பணையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், […]
திருச்சியியல் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படாததால், பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஜாக்ட்டோ- ஜியோ மாநில உயர்மட்டகுழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கென்னடி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி கொள்ளிடம் ஆணை ஆகஸ்ட் 22ல் இடிந்து விழுந்தன. இதனை சீரமைக்க பொதுப்பணி துறை அரசிடம் கூடுதல் நிதி கேட்க திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து இதை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, ஆணை உடைப்பை சீரமைக்க, 95 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.
இமாச்சல் பிரதேசம் குலுமணாலி வெள்ளத்தில் திருச்சியை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் மற்றும் 9 ஆசிரியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குலுமணாலிக்கு திருச்சியை சேர்ந்த கல்லூரி கல்வி சுற்றுலா சென்றிருந்தபோது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெள்ளத்தில் சிக்கினர் இமாச்சல் பிரதேசம் குலுமணாலி வெள்ளத்தில் திருச்சியை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் மற்றும் 9 ஆசிரியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குலுமணாலி வெள்ளத்தில் சிக்கிய திருச்சியை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் மற்றும் 9 ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் […]
திருச்சி நாவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தேசிய சட்டப்பள்ளியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சனிக்கிழமையன்று சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கான பல அம்சங்கள் இருந்து வருகிறது .ஆனால் ஆண், பெண் சமத்துவத்தில் முன்னோடி மாநிலமான தமிழகத்திலும் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. நம் நாட்டில் இயற்கை வளங்கள் […]
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலம் அண்மையில் இடிந்து விழுந்த நிலையில் மண் அரிப்பு காரணமாக புதுப்பாலத்தின் தூண்களும் வெளியே தெரிவதால், பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 1928ஆம் ஆண்டு கட்டபட்ட இரும்புப் பாலத்தின் ஒருபகுதி அண்மையில் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அதன் அருகிலேயே கட்டப்பட்ட புதிய பாலத்தின் தூண்கள் தற்போது வெளியே தெரிவதாகக் கூறும் பொதுமக்கள், மணல் சுரண்டலே இதற்குக் காரணம் என்கின்றனர். 2015ஆம் […]
திருச்சி , அழகிரி நடத்திய பேரணி, அவரை தமிழக அரசியலில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இன்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் முக.அழகிரி குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் அழகிரி திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவர். அவரை கட்சியிலிருந்து நீக்குவதும் நீக்காமல் இருப்பதும் உட்கட்சி விவகாரம். புதன்கிழமை அழகிரி நடத்தி காட்டிய ஊர்வலம் சாதாரண ஒன்றல்ல, அரசியல் மாற்றத்தை உண்டாக்க கூடிய ஓன்று அது தமிழக அரசியலில் அவரை […]
மேட்டூர் அணை நிரம்பிய கண் திருஷ்டியால்தான் முக்கொம்பு அணை உடைந்தது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பாக தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி திருச்சியில் உள்ள முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. திருச்சி – சேலம் சாலையில் வாத்தலை என்ற இடத்தில் முக்கொம்பு அணை உள்ளது.45 மதகுகளில் 8 மதகுகள் உடைந்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதன் பின்னர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முக்கொம்பு மேலணையில் மேலும் ஒரு மதகு […]
திருச்சி அரசு மருத்துவமனையில் தரமற்ற மருத்துவ உபகரணங்கள் பயன்பாடு புகார் பற்றி விசாரிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் , திருச்சி அரசு மருத்துவமனையில் தரமற்ற மருத்துவ உபகரணங்கள் பயன்பாடு புகார் பற்றி விசாரிக்கப்படும். அரசு மருத்துவமனை டீன் தலைமையில் விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்படும்.அரசு மருத்துவமனைகளுக்கு சர்வதேச தரத்தில் உபகரணங்கள் வாங்கப்படுகிறது அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிப்பதை தடுப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.
திருச்சியில் திருமணமான 6 மாதத்தில் போலீஸ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை சேர்ந்தவர் சேதுபதி (வயது24). இவர் திருச்சி கிராப்பட்டியில் சிறப்பு காவல் படை முதலாவது அணியில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர், பணிக்கு சேர்ந்து 2 ஆண்டுகள் தான் ஆகிறது. இவரது மனைவி இந்திரா (21). சிறப்பு காவல் படை முதலாவது அணி வளாகத்தில் உள்ள புதிய குடியிருப்பில் ‘எம் பிளாக்‘கில் மனைவியுடன் சேதுபதி வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 6 […]
உரையே உலுங்கிய மரணம் குறித்த தகவல். கல்லூரி மாணவன் தன்னுடைய தற்கொலை தகவலை தன்னுடைய நண்பர்களுக்கு வாட்ஸ் அப் அனுப்பியுள்ளார். திருச்சி: கல்லூரி மாணவன் தன்னுடைய மரணத்தை வாட்ஸ்அப்பில் தகவலாக சக நண்பர்களுக்கு அனுப்பி, அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பொதுமக்களை உறைய வைத்துள்ளது. துவரங்குறிச்சியை அருகே உள்ள ராசிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமர். 18 வயதுதான ராமர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் டி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களின் வாட்ஸ் […]
திருச்சி மாவட்டம் விராலிமலை அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் சகோதரர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். விராலிமலை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள இரட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் விமல்ராஜ் (வயது 24), அருண்பிரசாத் (23), குணசேகரன் (18) மற்றும் ராஜசேகர் (21). இதில் குணசேகரனும், ராஜசேகரும் சகோதர்கள் ஆவர்.இவர்கள் 4 பேரும் நேற்றிரவு சுமார் 11.30 மணியளவில் ஒரே மோட்டார்சைக்கிளில் விராலிமலை அருகே லஞ்சமேடு என்ற இடத்தில் உள்ள […]
திருச்சி முக்கொம்பில் 9 மதகுகள் உடைந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மதகுகள் சீரமைக்கும் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆய்வு செய்தார். முக்கொம்பில் உடைந்த 9 மதகுகளையும் முதல்வர் பார்வையிட்டு ரூ.455 கோடி செலவில் புதிய கதவணைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.இந்த நிலைந்த நிலையில் மதகு உடைந்த இடத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மதகுகள் ஆற்று நீரால் அடித்து செல்லப்பட்டது. மேலும் 9வது மதகு நேற்று காலையும் நீரால் அடித்து செல்லப்பட்டு உடைந்தது. உடைந்த மதகுகளை பார்வையிடுவதற்காக முதல்வர் பழனிசாமி காலை திருச்சி சென்றடைந்துள்ளார்.முதல்வர் பார்வையிடும் நிலையில் இன்று காலை முதல் உடைந்த மதகுகளை சீரமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கொள்ளிடத்தில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீர் தற்காலிகமாக […]
முதலமைச்சர் பழனிசாமி திருச்சி முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்த பகுதியை இன்று பார்வையிடுகிறார். நேற்று முன்தினம் இரவு திருச்சியில் உள்ள முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. திருச்சி – சேலம் சாலையில் வாத்தலை என்ற இடத்தில் முக்கொம்பு அணை உள்ளது.இந்த அணையில் உள்ள மதகுகள் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். 45 மதகுகளில் 8 மதகுகள் உடைந்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.நேற்று முக்கொம்பு மேலணையில் மேலும் ஒரு மதகு […]
ஆகஸ்ட் இறுதிக்குள் ஏரி, குளங்களில் தண்ணீர் முழுமையாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தெரிவித்தார். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரானது காவிரி, கொள்ளிடத்தில் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களை திறக்கப்பட்டு ஏரி, குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: மாவட்டத்தில் உள்ள 76 ஏரி, குளங்களுக்கு முழுமையாக தண்ணீர் கொண்டு செல்லும் […]