காஞ்சிபுரத்தில் அனாதையாக கைவிடப்பட்ட அமெரிக்க பெண்மணியை அரை நிர்வாண கோலத்தில் காவல்துறையினர் மீட்டனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க கேலா மரீன் நெல்சன் என்ற பெண்மணிக்கும் சென்னை வேளச்சேரி பகுதியில் இருக்கக்கூடிய மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விமல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு நிறுவனத்திலிருந்து விமல் வேலை இழந்துள்ளார். அவருடைய மனைவியான கேலா மரீன் நெல்சன் போதைக்கு அடிமையானவர் எனவும் போலீசாரால் கூறப்படுகிறது.
பெண் காவலருடன் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அமெரிக்க பெண்மணியை மீட்டு அவருக்கு புதிய துணி உடுத்தி காவல்துறையினர் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.பின்னர் வேளச்சேரி காவல் நிலத்திற்கு தகவல் தெரிவித்து. சமூக நலத்துறையின் வழிகாட்டுதலின் பேரில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள லிட்டில் ஆர்ட்ஸ் எனும் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.
அமெரிக்கப் பெண்மணி கொடுத்த தகவலின் பேரில் வேளச்சேரி போலீசார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று விசாரித்ததில் விமல் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து காலி செய்து தற்போது தலைமறைவாக உள்ளது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அமெரிக்க தூதரகத்தினர் காவல்துறையினர் உதவியுடன் காப்பகத்தில் இருந்த பெண்ணை மீட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பிவைத்தனர்.
DINASUVADU
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…