டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த நியூஸிலாந்து அணி

உலக கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் முதல் போட்டியில் நியூஸிலாந்து Vs இலங்கை ஆகிய இரு அணிகளும் மோத உள்ளது. இப்போட்டி கார்டிஃப்பில்  உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
நியூஸிலாந்து அணி வீரர்கள்: மார்ட்டின் குப்தில், கொலின் முர்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லதாம் , ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், மாட் ஹென்றி, லாக்ஸி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பெற்றனர்.
இலங்கை அணி வீரர்கள்:திமுத் கருணாரட்னே (கேப்டன்), லஹிரு திமமன்னே, குசால் பெரேரா , குசன்ஸ் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தியரா பெரேரா, இசரு உதான, ஜீவன் மெண்டிஸ், சுந்தர லக்மால், லசித் மலிங்கா ஆகியோர் இடம் பெற்றனர்.

author avatar
murugan

Leave a Comment