புத்தாண்டு கொண்டாட்டாட்டம் – முகக்கவசம் அணிய அமைச்சர் அறிவுரை!

By

சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் 2 பேருக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன எனவும் தெரிவித்த அமைச்சர், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கிருமிநாசினியை மக்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Dinasuvadu Media @2023