ஆழ்துளை கிணறு பற்றி புகார் கூற உருவாக்கப்பட்ட புதிய விசில் ஆப்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில், தனது வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, பராமரிப்பின்றி கிடந்த ஆழ்துளை கிணற்றில், 2 வயது குழந்தையான சுஜித் விழுந்ததில், 5 நாட்களுக்கு பின் இவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 24 மணி நேரத்திற்குள் பயன்படாமல் கிடைக்கும் ஆழ்துளைக்கிணறுகளை மழைநீர் சேகரிப்பு நிலைகளாக மாற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, அதிமுக தொழில்நுட்ப பிரிவு, அபாய நிலையிலுள்ள ஆழ்துளை கிணறுகளை கண்டறிய “விசில் ரிப்போர்ட்டர்” என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை பிளே ஸ்டோரில் தரவிறக்கல் செய்து கொண்டு, மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம்.
இந்த செயலியை பயன்படுத்துபவர்கள், பயன்படாத ஆழ்துளை கிணற்றின் அருகில் நின்றுகொண்டு, செயலின் வலதுபுறமாக கீழே இருக்கும் பச்சை நிற பொத்தானை அழுத்தினாள் தகவல் சென்றுவிடும். பிறகு உங்களது லொகேஷனை கண்டுபிடித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயலி குறித்த விபரங்களை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.