விநாயகர் சதுர்த்தி – “அண்ணாத்த” என்ட்ரி.! வெளியான புதிய அப்டேட்.!

அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்த தகவல் பரவி வருகிறது. 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகிறது.

இந்நிலையில், இன்னும் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகவில்லை என்பதால் ரஜினி ரசிகர்கள் எப்போது தான் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என காத்துள்ளனர். இதனையடுத்து, தற்போது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி  விநாயகர் சதுர்த்தி அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.