சூர்யா 40 திரைப்படத்தின் புதிய அப்டேட்..!!

சூர்யா 40 படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

நடிகர் சூர்யா அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கபட்டிருந்தது. தற்போது மீண்டும், படத்தின் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு தொடங்கபட்டுள்ளது. சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 23 ஆம் தேதி சூர்யா 40 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.