மாநாடு திரைப்படத்தின் புதிய அப்டேட்..!! உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்..!

மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் மே 14 ஆம் தேதி ரம்ஜான் தினதன்று வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கான முதல் பாடல் வெளியாகும் தேதியை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அந்த வகையில் வருகின்ற ரம்ஜான் தினமான மே 14 ஆம் தேதி படத்திற்கான முதல் பாடல் வெளியாகவுள்ளது. மீண்டும் சிம்பு & யுவன் கம்போ இணைந்துள்ளதால் பாடலின் மேல் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. மேலும் விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.