கூகுள் தயாரிப்புகளில் புதிய அப்டேட்..! அட்டகாசமான AI அம்சம் அறிமுகம்..!

கூகுள் தயாரிப்புகளில் புதிய அப்டேட்..! அட்டகாசமான AI அம்சம் அறிமுகம்..!

கூகுள் தனது தேடல், வரைபடம் மற்றும் மொழிபெயர்ப்பில் புதிய AI அம்சங்களை அறிவித்துள்ளது.

கூகுள் தனது தயாரிப்புகளில் தேடல் (Search), வரைபடம் (map) மற்றும் மொழிபெயர்ப்புகளில்  (translate) புதிய செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களை அறிவித்துள்ளது. பாரிஸில் நடந்த ஒரு நிறுவனத்தின் நிகழ்வில் பேசிய கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பிரபாகர் ராகவன், AI மூலமாக என்னவெல்லாம் சாத்தியமாகும் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். எங்கள் மனதைப் போலவே செயல்படும் புதிய தேடல் அம்சங்களை உருவாக்குகிறோம்.

Google Office 1
Representative Image

இது மக்களாகிய நாம் இயற்கையாகவே உலகத்தை எப்படி உணருகிறோம் என்பதைப் பிரதிபலிக்கும். இந்த புதிய தேடலின் சகாப்தத்தில் நாம் நுழையும்போது, எந்த மொழியாக இருந்தாலும் நீங்கள் தகவல்களைப் புரிந்து கொள்ள முடியும் என்று கூறினார்.

கூகுள் தேடலில், பலதேடல் (multisearch) என்ற அம்சத்தை வெளியிடுகிறது. இது பயனர்கள் மொபைலில் உள்ள கூகுள் லென்ஸ் மூலம் அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் உரை மற்றும் படங்களைப் பயன்படுத்தி தகவலை தேட முடியும். சில மாதங்களில், உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் தங்கள் மொபைல் திரையில் உள்ளதைத் தேடுவதற்கு காட்சி AI (Visual AI) அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

Google Lens
Image Source moneycontrol

கூகுள் ட்ரான்ஸ்லேட், பயனர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கான ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மற்றும் ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் கூடுதல் மொழிபெயர்ப்பு விருப்பங்கள் மற்றும் விளக்கங்களை எடுத்துக்காட்டுகளுடன் பார்க்க முடியும்.

Google Translate
Image Source moneycontrol

கூகுள் மேப்ஸைப் பொறுத்தவரை மின்சார வாகன (EV) ஓட்டுநர்களுக்கான புதிய வரைபட அம்சங்களை தேடல் நிறுவனமும் வெளியிடுகிறது. தற்போதைய போக்குவரத்து, கட்டண நிலை மற்றும் அதிகமான சார்ஜர்களைக் கொண்ட நிலையங்களைக் கண்டறிய பயனர்களுக்கு பெருமளவில் உதவும்.

Google Maps
Representative Image
author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *