கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறை.! சவுதி அரேபியாவுடன் இணைந்து ரஷ்யா சோதனை.!

கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை ரஷ்யா உருவாக்கியுள்ளது, விரைவில் சவுதி அரேபியாவுடன் சேர்ந்து சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்.

நாடு முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் உலக நாடுகள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு ஒரே வழி தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் என்று கூறி வல்லுநர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை ரஷ்யா உருவாக்கியுள்ளது என்றும் விரைவில் சவுதி அரேபியாவுடன் இணைந்து சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ரஷ்யா தரப்பில் கூறுகையில், நாம் சவுதி அரேபியாவுடன் இணைந்து கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையைக் கையாள உள்ளோம். வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு Avifavir என்ற சிகிச்சை முறையைப் பயன்படுத்தும்போது அது நல்ல பலனை அளித்துள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியாவுடன் பேசி வருகிறோம்.

சவுதி அரேபியா இந்தப் புதிய சிகிச்சை முறையை இணைந்து சோதனை நடத்த ஆர்வமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஷ்யாவில் 4,05,843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 4,693 பேர் பலியாகியுள்ளனர். சவுதி அரேபியாவில் 85,261 பேர் பாதிக்கப்பட்டு, 503 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்