பயணிகளுக்காக புதிய சேவையை அறிமுகம் செய்யும் இந்திய ரயில்வே!

இந்தியாவில் முதன் முறையாக ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மசாஜ் செய்யும் முறையை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதலில்  மேற்கு ரயில்வே மண்டலத்தில் இந்த முறையானது நடைமுறைக்கு வருகிறது என்று ரயில்வே அதிகாரி ராஜேஷ் பஜ்வாய் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே பொது போக்குவரத்தில் முதன்மையானது ரயில்வேத்துறை , இந்திய முழுவதும் சுமார் 4 கோடி மக்கள் தினமும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்,அவர்கள் வசதிக்காக முதல் கட்டமாக மேற்கு மண்டலத்தில் இயங்கும் 39 ரயில்களில் பயணிகளுக்கு மசாஜ் செய்யும் முறையை கொண்டு வர உள்ளனர். இதற்கென தனிக்கட்டணம் 100 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.