கொரோனா மரணங்கள் பற்றிய உண்மைகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக மயானங்களில் புதிய விதிமுறைகள்- உ.பி. அரசு..!

கொரோனா மரணங்கள் குறித்த உண்மைகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக உத்திரபிரதேச அரசு,மயானங்களில் புதிய விதிமுறைகளை கடைபிடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருவதால்,அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடித்து வருகிறது.ஆனால்,உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லவே இல்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி வருகிறார்.

இந்த நிலையில்,உத்தரப் பிரதேசத்தில் தற்போது இறப்பு எண்ணிக்கையையும் குறைத்து காட்டும் முயற்சியில் முதல்வர் யோகி ஈடுபட்டுள்ளார் என்றும்,

அதனால்,மயானங்களில் எரிக்கப்படும் சடலங்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியே தெரியாமல் இருக்க சடலங்களை புகைப்படம் எடுப்பதற்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும்,சில வட இந்திய செய்தி ஊடகங்கள் கூறியுள்ளன.

அதன்படி,முதல்வர் யோகியின் சொந்த ஊரான கோரக்பூரில்,பிளாஸ்டிக் மற்றும் துணியால் செய்யப்பட்ட பேனர்களில்,”இங்கே சடலங்கள் அனைத்தும் இந்து சமய முறைகளின்படி சடங்குகள் செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன.எனவே,சடலங்களை புகைப்படமோ மற்றும் வீடியோவோ எடுப்பது தண்டனைக்குரியக் குற்றம்” என எழுதப்பட்டிருக்கிறது.

இதனால்,உத்திரப்பிரதேசத்தில் கொரோனா மரணங்கள் குறித்த உண்மைகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக உத்திரபிரதேச அரசு,மயானங்களில் புதிய விதிமுறைகளை கடைபிடிப்பது உறுதியாகியுள்ளது.